நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் நடிகை டாப்ஸி இயக்குனர் விணில் மேத்யூ இயக்கத்தில் ஹஸீன் தில்ரூபா படத்தில் நடித்துள்ளார்.
https://twitter.com/taapsee/status/1403224068371795969
மேலும் இந்த படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, விக்ரான்ட் மாஸே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அமித் திரிவெதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த படம் வருகிற ஜூலை 2-ஆம் தேதி நெட்பிலிக்ஸில் ரிலீஸாகவுள்ளது .