Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸி மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத் தொடர்ந்து இவர் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் டாப்ஸி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

Samantha invokes Shilpa Shetty's example in court case | The Rahnuma Daily

மேலும் சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார் . இந்நிலையில் டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |