தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள மேஸ்ட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடைசியாக இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் சீட்டிமார், மேஸ்ட்ரோ, தட் இஸ் மகாலட்சுமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மேஸ்ட்ரோ படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் .
இதில் ஹிந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் தமன்னா நடித்துள்ளார். மேலும் மெர்லபக்கா காந்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நிதின், நபா நடேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் மேஸ்ட்ரோ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.