பிரபல நடிகர் ராதாரவி ஒரு நடிகையை பற்றி சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக ராதாரவி வலம் வருகிறார். இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ஆவார். ஏனெனில் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை நயன்தாரா பற்றி நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் நடைபெற்ற கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது ஓடிடி தளம் பற்றிய ஒரு சர்ச்சையான கருத்தை ராதாரவி கூறினார். அதேப்போன்று நடிகை தமன்னாவை பற்றியும் பேசியுள்ளார்.
அதாவது நடிகை தமன்னாவை தான் சுற்றி சுற்றி பார்த்ததாகவும் ஒரு இடத்தில் கூட அவருடைய உடம்பில் கருப்பை பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து நடிகை தமன்னாவை போன்றே வெள்ளையாக கனல் படத்தின் ஹீரோயினும் இருப்பதாக கூறினார். இந்நிலையில் ராதாரவி நடிகை தமன்னாவை பற்றி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் டப்பிங்கில் இருந்து தடை செய்யப்பட்ட தலைவர் ராதாரவி என்று குறிப்பிட்டுள்ளார்.