சென்னை விரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) 2 நாட்களுக்கு முன்பு இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி கொண்டனர். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று தீபா எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன iphone மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்ட போது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலிசார் மீட்டனர். மொத்தமாக நடிகை தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள் ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. மேலும் தடையங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக தடவியல் ஆய்வுக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர்.