Categories
சினிமா

நடிகை தீபா தற்கொலை வழக்கு….. காதலன் சிராஜுதீன் விசாரணையில் கூறிய அதிர்ச்சி தகவல்…..!!!

சென்னை விரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) 2 நாட்களுக்கு முன்பு இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி கொண்டனர். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று தீபா எழுதி வைத்துள்ளார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தீபா செல்போன்களை ஆய்வு செய்த போலிசார் தீபாவை காதலித்து ஏமாற்றிய இயக்குனரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன்தான் என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் தீபாவிடம் சிராஜுதீன் இரவில் மணிகணக்கில் போனில் பேசியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தீபாவுக்கு சிராஜுதீன் ஐபோன் வாங்கிக் கொடுத்ததும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அந்த போனை தனது நண்பர் பிரபாகரனை வைத்து சிராஜுதீன் எடுத்து வரச் சொன்னதும் தெரிய வந்தது. இதனையடுத்து தீபா தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் நபராக அவரது வீட்டிற்கு வந்த பிரபாகரனையும் போலீசார் விசாரணைக்கு கொண்டு வந்தனர். பிரபாகரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐபோன் மற்றும் தீபாவின் செல்போன்களில் சிராஜூதீனும் தீபாவும் நெருக்கமாக இருந்ததற்கான பல போட்டோக்கள் இருந்தது. மேலும் தீபாவின் ஐபோனிலிருந்து சில வீடியோக்களும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தற்கொலை குறித்து ஆஜராகாமல் காலம் கடத்தி வந்த சிராஜுதீன் இன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபா கடந்த 5 மாதங்களாக தன்னை ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் நான் அவரை காதலிக்கவில்லை. மேலும் அவர் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததார். மேலும் தீபாவுக்கு தோல் பிரச்சினையில் இருந்து வந்தது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |