பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழில் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தீபிகாவுக்கு மருத்துவர்கள் பலவிதமான டெஸ்ட்களை எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீபிகா ஹைதராபாத்திற்கு ஷூட்டிங்காக சென்றபோது திடீரென அவருக்கு இதயத்துடிப்பு அதிகமாகியுள்ளது. அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீபிகா அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சைக்கு பிறகு தீபிகா உடல் நலம் தேறி வீடு திரும்பினார். இந்த சூழலில் நடிகை தீபிகாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது தீபிகா நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.