Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு”…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் இந்தி சீரியல் நடிகையான துனிஷா சர்மா(21) சென்ற 24-ம் தேதியன்று சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்” என்ற தொடரில் தன் முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் மீது துனிஷா சர்மாவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் சென்ற 25-ம் தேதியன்று நடிகர் ஷீசனை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் ஷீசனை பிரிந்ததன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இவர்களது பிரிவுக்கு டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட போது, அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். என்னை இணை நடிகராக பெற்றது அவர் பாக்கியம் என சக நடிகரும், முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான் பற்றி அக்கடிதத்தில் குறிபடப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். துனிஷா சர்மாவுடன் காதலில் இருந்த ஷீசன் கான் மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு வைத்து இருந்தார். துனிஷா தற்கொலை செய்து கொண்ட அன்று, ஷீசன் ரகசிய காதலி’யுடன் 2 மணிநேரம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. ரகசிய காதலி மற்றும் ஷீசனுக்கு இடையிலான அரட்டைகள் மொபைலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது அதை மீட்டெடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |