Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி தகவல்…!!!

நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

 

விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (kurian kodiyattu) உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |