பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய குரியன் என்பவருக்கும், ஓமன குரியன் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரியன், தற்போது திடீரென்று உடல்நலம் பிரச்சனை தீவிரமடைய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அவரின் உடல் மோசமானதால் அவரை பார்ப்பதற்காக நயன்தாரா கேரளா சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து நயன்தாரா ரசிகர்கள் அவரது தந்தை குணமடைய வேண்டி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.