Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்  நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுதவிர நயன்தாரா மலையாளத்தில் நிழல் படத்தில் நடித்துள்ளார். அப்பு என். பட்டாத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Nayanthara Poses With Kunchacko Boban's Family On 'Nizhal' Sets, See Pics  Here

இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 2வது  வாரம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் இரவுக் காட்சிக்கு அனுமதி கிடைத்து விட்டால் நிழல் படத்தை அப்போது ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிழல் படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கோல்ட் கேஸ் படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |