Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் படம் ஓடிடி-யில் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

கடந்த மாதம் நடிகை நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நிழல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான நிழல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் 8 வயது சிறுவனுக்கு தாயாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

Nizhal movie review: Nayanthara, Kunchacko Boban thriller is high on  promise and low on delivery | Entertainment News,The Indian Express

மேலும் அப்பு என்.பட்டாத்திரி இயக்கியிருந்த இந்த படத்தில் பிரபல நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில் நிழல் திரைப்படம் வெளியானதால் திரையரங்குகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் செல்லவில்லை. இந்நிலையில் நிழல் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |