நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆர்.ஜே பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினர் வெளியிடப்பட்டது. இந்த பஸ்ட் லுக் வெளியிடப்பட்ட சில மாணிதுளிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகியிருந்த எல்.கே.ஜி படத்தையும் வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. அந்த படப்பிடிப்பின்போது, ஆர்.ஜே பாலாஜி தன் கதையை சொல்ல, அது தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் படத்தை உடனடியாக தொடங்கவும் சம்மதித்துவிட்டார் .
படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு தொடங்கி முடிந்து ரிலீசுக்கும் தயாராகி வருகிறது. இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு பெரிய தொகை ஒன்று சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. கோடையில் விடுமுறையில் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், தேவி 2, கோமாளி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தது. வெகு நாட்களாக ரிலீசாகாமல் பிரச்சனையில் சிக்கியிருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாங்கி வெளியிட்டது. தற்போது ஜோஸுவா இமை போல் காக்க, சுமோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தையும் வெளியிடவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .