மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி வைத்த இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார். பிரபலம் இல்லாத சத்யதேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது, அவரை மாற்றுங்கள் என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது சத்யதேவுடன் தான் நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் இந்த சம்பளமாம்.தெலுங்கில் ஒரு நடிகைக்கு நான்கு கோடி சம்பளம் கொடுப்பது இதுவே முதன் முறையாகும் என கூறப்படுகிறது