Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நிகிலா விமலின் தந்தை மாரடைப்பால் மரணம்… திரையுலகினர் சோகம் …!!

நடிகை நிகிலா விமலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தமிழ் திரையுலகில் நடிகை நிகிலா விமல் ‘வெற்றிவேல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ‌.இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக ‘கிடாரி’ படத்திலும்  சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்தியின் ‘தம்பி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்‌ திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மேலும் அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |