Categories
தேசிய செய்திகள்

நடிகை பார்வதி நாயர் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டல்… முன்னாள் ஊழியர் மீது வழக்கு பதிவு… போலீஸ் விசாரணை…!!!!!

தமிழ் திரைப்பட  நடிகையான பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா மற்றும்  செல்போன் போன்றவற்றை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறி சுபாஷ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த வாரம்  பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் சுபாஷ் சந்திரபோஸ் மீது புகார் அளித்துள்ளார். அதாவது சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துவருவதாக கூறியுள்ளார். அந்த புகாரியின் பேரில் இன்று மீண்டும் நுங்கம்பாக்கம் போலீசார் மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவு படுத்துதல், இழிவுபடுத்தும் புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட  மூன்று பிரிவுகளின் கீழ் சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் சுபாஷ் சந்திரபோஸிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |