கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் திலிப் சாட்சிகளை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நடிகர் திலீப்பிடம் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவில் சேர்ந்த ஒருவர் திடீரென்று பல்டி அடித்துள்ளார். அதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவியா மாதவனிடமும் விசாரணை நடத்துவதற்கு குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.