Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பாலியல் வழக்கு…. தலைமறைவான பிரபல நடிகர்…. முன்ஜாமினை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!!

கேரளாவைச் சேர்ந்த மலையாள சினிமா நடிகரான விஜய் பாபு சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் புதுமுக நடிகை ஒருவரை வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல்  பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நடிகர் விஜய் பாபு வெளிநாட்டில் தலை மறைவாகியிருக்கிறார். அங்கு இருந்தபடியே அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிய நீதிமன்றம் போலீசார் அவரை கைது செய்தால் ஜாமின் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜரான விஜயபாபுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜய்பாபு வீட்டிற்கு போலீசார் அவரை நேற்று அழைத்து சென்றுள்ளனர். அங்கு தடயங்களை சேகரித்த போலீசார் இன்றும் விஜய் பாபு உடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த விசாரணை முடிந்த பின் நாளை சம்பவம் நடந்த விடுதிக்கு விஜயபாபு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். இதன் மூலமாக நடிகர் விஜய் பாபுவிற்கு அளிக்கப்பட்ட முன்ஜாமின்  ரத்து செய்யவும் போலீசார்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்ஜாமீனை  எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுவின் விசாரணை நடக்கும் போது விஜய் பாபுவிற்கு எதிரான வலுவான சாட்சியங்களை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

Categories

Tech |