Categories
சினிமா

“நடிகை பாலியல் வழக்கு”…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. அதிரடியில் இறங்கிய போலீஸ்…..!!!!

கேரள மாநிலம் கொச்சியில் சென்ற 2017ஆம் வருடம் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திலீப் வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் பெறப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடிகர் திலீப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அவரது செல்போன்களை கைப்பற்றி அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார், அவர்களுடன் என்ன பேசினார்..? என்பதை கண்டறிய காவல்துறையினர் முயற்சி செய்தனர். அதன்பின் நடிகர் திலீப்பின் செல்போன்களை ஆய்வு மேற்கொண்ட போது அவர் சில பேருடன் பேசியதை அழித்திருப்பது தெரியவந்தது.

அந்த நபர்கள் யார்..? என்பதை சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் செல்போன் நிறுவன துணையுடன் போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் திலீப்பும், பிரபல நடிகை ஒருவரும் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அந்த நடிகை துபாயில் உள்ளதாக தெரிகிறது. அவரிடமும் விசாரிக்க கேரள காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர். அந்த நடிகை துபாயில் உள்ளதால் அவரிடம் ஆன்லைன் வாயிலாக விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். ஆகவே இதற்கான அனுமதி பெற்று நடிகையிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Categories

Tech |