Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மகாலட்சுமியுடன் காதல் மலர்ந்த கதை….. ஓ இப்படி தானா?….. ok… ok….!!!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.  தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் நமக்கு தெரியும். தனக்கென ஒரு யூடியூப் சேனலை வைத்துக்கொண்டு அதில் சர்ச்சையான சில கருத்துக்களை பேசி வருவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென்று திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுவரை காதல் கிசுகிசு எதிலும் சிக்காமல் திடீரென திருமணம் நடந்தது எப்படி என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த வாரம் மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவில், என்னுடைய ‘விடியும் வரை காத்திரு’ படத் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின்போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கும் என்ற பேச்சு தொடங்கியுள்ளது.

Categories

Tech |