தமிழ் திரையுலகில் கடந்த 1982 ஆம் வருடம் நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை மீனா. இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையானார். இதற்கிடையில் மீனா நாயகி என்பதை தாண்டி பாடகியாகவும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
சென்ற ஜுன் 28 ஆம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். இதற்கிடையில் மீனாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் அவரது தோழிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நேரத்தில் தான் மீனாவின் தாயார் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு பேரும் அழகாக புடவையில் எடுத்த அந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.