பிரபல நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது.
https://www.instagram.com/p/Cf84_GQPlRc/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்நிலையில் நடிகை மீனா மற்றும் வித்யாசாகரின் திருமண நாள் கடந்த 13-ஆம் தேதி வந்தது. இந்த திருமண நாள் அன்று நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் மனதில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.
https://www.instagram.com/reel/Ce3jZlQOI08/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்நிலையில் நடிகை மீனா கணவர் இறந்த சிறிது நாட்களிலேயே சூட்டிங் சென்று விட்டார் என்று வதந்திகள் பரவியது. இதனையடுத்து ரசிகர்கள் மீனாவிடம் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள் அப்போது தான் உங்களால் துக்கத்திலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என கூறினர். இதன் காரணமாக நடிகை மீனா சூட்டிங் ஸ்பாட்டில் தான் சிரித்த முகத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.