சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறி விட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதையடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்யக்கோரி மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் உள்ளிட்ட பல அமைப்புகள் புகார் அளித்த நிலையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீஸ் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது .