மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.