Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா ஆனந்த் கைது…? – போலீசார் பரபரப்பு…!!!

மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ள நிலையில் விரைவில் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

 

Categories

Tech |