நடிகை ரம்பா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து 2010-ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பின், ரம்பா நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் உள்ளார். இப்போது தங்கையின் குடும்பத்தை பார்ப்பதற்காக வாசு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உடன் வாசு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.