Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’… செம திரில்லான ஸ்னீக் பீக் வீடியோ இதோ…!!!

நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிண்ட்ரெல்லா. ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

எஸ்.சுப்பையா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சிண்ட்ரெல்லா படத்தின் செம திரில்லான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |