தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட நாயகி ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசினார் .
அதில் விஜய் தான் தன்னுடைய கிரஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்பொழுது பார்த்தாலும் சுற்றி போடுவது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அப்படி ராஷ்மிகா செய்தால் விஜய் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று சென்றுவிடுவார் என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.