கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா . இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . அதன்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சாய் கோகுல் ராம்நாத் இயக்கும் இந்த சீரியலில் நடிகை ரேஷ்மாவின் காதலர் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் படவா கோபி, சோனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்நிலையில் அபி டெய்லர் சீரியல் வருகிற ஜூலை 19-ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.