பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நடிகை ரைசா வில்சனிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம் என மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் ரைசா எங்களை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு முக அமைப்பை அழகாக மாற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா இந்த சிகிச்சைக்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.