நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுதவிர சுந்தர் பாலு எழுதி இயக்கியுள்ள கன்னித்தீவு படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா, ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருத்திகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கன்னித்தீவு படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.