நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் சக்சேனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனமும் அபன்டன்டியா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
Be courageous. Be strong. Be fearless. It's time for the #Sherni to roar! #SherniTrailer out now: https://t.co/8nbA3i4Vvs
Meet #SherniOnPrime,June 18 @PrimeVideoIN @tseriesfilms@TSeries@Abundantia_Ent@vikramix@ShikhaaSharma03@AasthaTiku@MPTourism#AmitMasurkar #BhushanKumar pic.twitter.com/UMDQVqT0ud— vidya balan (@vidya_balan) June 2, 2021
இந்த படத்தில் நடிகை வித்யாபாலன் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஷெர்னி படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஷெர்னி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.