Categories
மாநில செய்திகள்

நடிகை ஷகிலாவுக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி… எந்தக் கட்சியில் தெரியுமா..?

நடிகை ஷகிலாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் அரசியலுக்கு வருவேன் எனக்கூறிய ஷகிலா. இன்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார்.

ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகி அம்மா என்ற அடையாளத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்து அவருக்கு மாநில பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |