நடிகை ஷாலினி கண்டிப்பாக சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று டைரக்டர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலக நடிகையான ஷாலினி காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம் உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின்பு நடிக்கவில்லை. இவ்வாறு இருக்க டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த டைரக்டர் வெங்கட்பிரபு அவர் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஷாலினி தனது 2 குழந்தைகளை கவனிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.