Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்…. ஆபாச பட வழக்கில் கைது – பரபரப்பு…!!!

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா மும்பையில் ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்போன் ஆப்பில்  பதிவேற்றம் செய்துள்ளார். அதற்கான ஆதாரங்களும் காவல் துறையிடம் உள்ளது. எனவே அவர் மீது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதன்  காரணமாக அவரை கைது செய்துள்ளோம். மேலும் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |