Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்ப நிகழ்ச்சி…. சினேகா – அன்மோல் திருமணம்…. சமூக வலைத்தளங்களில் வைரல்….!!!!

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடிகை ஸ்ரீபிரியா இருந்தார். இவர் 1988-ஆம் வருடம் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகஅர்ஜுன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சினேகா லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கு லண்டன்  பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் அன்மோல் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் ஏற்கனவே லண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் வைத்து தென்னிந்திய முறைப்படி பிரம்மாண்டமான முறையில் சினேகா-அன்மோல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சரத்குமார்-ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |