சமூக வலைத்தள பக்கத்தில் ‘நடிக்க தகுதி இல்லாத நடிகை ‘என விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி.
தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர். தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் துணிச்சலாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும் போதைப்பொருள் விவகாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றை விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்க்கு எதிர்ப்பு தெரிவித்தார் . இதனால் நடிகை கங்கனாவின் ரசிகர்கள் டாப்ஸியை விமர்சித்தனர்.
இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ‘ நீங்கள் நடிக்க தகுதி இல்லாத நடிகை , சினிமாவில் நடிக்க வேண்டாம்’ என விமர்சித்த ரசிகருக்கு நடிகை டாப்ஸி பதிலடி கொடுத்துள்ளார்.அதில் ,’என்னை தகுதியாக்க என்ன செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுதான் . அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைதான் . உங்கள் கருத்தை இன்னும் நான்கைந்து முறை பகிருங்கள் அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.