Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிக்க வரலைன்னா என்ன செய்து இருப்பீங்க….?” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நிதி அகர்வால்…!!!!!!

நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை நிதி அகர்வால் பதில் அளித்துள்ளார்.

நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்க நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்டார். அதற்கு அவர் கூறியுள்ளதாவது, நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள். சம்பாதிக்க ஏதாவது வேலைக்கு போ என சொல்லி இருப்பார்கள். நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதை செய்திருப்பேன். என் குடும்பம் பிசினஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |