நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் சமந்தா சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் திருமண விழாக்களில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார். தனது பொருளாதார வாழ்க்கையை, சமாளிக்க திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்த சமந்தா தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இதனால் சமந்தாவை தங்களது ரோல்மாடல் என கூறி, ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.