Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்த கலைஞர்…. நாடக மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. பெரும் சோகம்….!!!

நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் நரசிம்மன் மற்றும் நாரதர் வேடத்தில் நடக்கும் ராஜய்யனின் ஆடல் ,பாடல் மற்றும் வசனங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் வருவார்கள்.

இதனையடுத்து 5-வது நாள் நாடகம் முடியும் வேளையில், மேடையில் ஆடி பாடிக் கொண்டிருந்த ராஜய்யன் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ராஜய்யனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜய்யனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு ராஜய்யன் உடல் அவருடைய வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவருடைய இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Categories

Tech |