நியூயார்க்கின் இரவு நேரத்தில் ஆபத்திலிருந்த இளம்பெண்ணை சமயோகித யோசனையால் காப்பாற்றிய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நியூயார்க் நகரின் இரவு நேரத்தில் Pikka என்ற இளம் பெண் காரில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் சீண்டியிருக்கிறார். இதனை தற்செயலாக பார்த்த Pikka அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்துள்ளார். எனினும் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பயத்துடன் அப்பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்தை தடுக்க எண்ணி அவர்கள் அருகில் நெருங்கியுள்ளார்.
அதன் பின்பு Pikka அந்த பெண்ணிடம் காரில் உனக்காக எவ்வளவு நேரம் நான் காத்திருக்கிறேன். இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டுள்ளார். உடனே அந்த நபர் சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்று கூறியுள்ளார். இதனால் இவர் உனக்கு தெரிந்தவரா? என்று Pikka பெண்ணிடம் மெதுவாக கேட்டுள்ளார்.
அதற்கு அப்பெண் இல்லை என்று கூறியதும் உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு அப்பெண்ணிடம் காரில் உங்களை விடவா? என்று Pikka கேட்டதும் அந்தப் பெண் உடனே ஆம் என்று கூறியுள்ளார். உடனடியாக இருவரும் காரில் அங்கிருந்து பறந்துள்ளனர்.
இந்த வீடியோவை இணையதளத்தில் Pikka பதிவேற்றம் செய்துள்ளார். பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்று கூறுவர். அதனை பொய்யாக்கும் வகையில் செயல்பட்ட Pikkaவை பலரும் “தைரியமானவர்” என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் Pikka இந்த பெண்ணை காப்பாற்றவிடில் அந்த இளம்பெண் கடத்தப்பட்டிருப்பார் போல தெரிகிறது.