Categories
சினிமா தமிழ் சினிமா

“நடுக்கடலில் அரபிக் குத்து பாட்டுக்கு…. செம ஆட்டம் போட்ட பீஸ்ட் நாயகி”….  இணையத்தில் செம வைரலாகும் வீடியோ….!!!

பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையில் கலக்கலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் விஜய்யின் நடனம் இந்தப் பாடலுக்கு கூடுதலாக பலம் சேர்த்துள்ளது. எப்பொழுதும் விஜயின் நடனம் எல்லா படங்களிலும் தெறிக்கவிடும் அதேபோலவே இப்பாடலிலும் அசத்தலாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பாடலுக்கு  பலரும் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடுக்கடலில் ஒரு படகில் அரபிக்  குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு அது செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |