அமெரிக்காவின் புளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட். இவர் புளோரிடாவின் போர்ட் கனவர்ல் பகுதியிலுள்ள துறைமுகத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் நவீன படகில் வழக்கமான பயணமான அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்கவும், சுற்றுப் பார்க்கவும் சென்றுள்ளார்.
அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் கடலில் தங்குவது இல்லை. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தனது படகில் கடலுக்கு சென்ற ஸ்டூவர்ட் இன்று இரவு கரை திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டூவர்டின் உறவினர்கள் அடுத்த நாள் காலை 11 மணியளவில் ஸ்டூவர்ட் காணாமல் போனது பற்றி கடலோர காவல் படையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை தேடும் பணியில் காவல்படையினர் விரைந்தனர். இருப்பினும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் மாயமாகி கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் கடற்கரையிலிருந்து 86 மைல் தொலைவில் ஸ்டூவர்ட் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ” எனது படகு நவம்பர் 27 நள்ளிரவில் நடுக்கடலில் நின்று இருந்த போது திடீரென்று கோளாறு ஏற்பட்டது. கடல் நீர் படகில் நுழைந்ததால் படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் மேற்பரப்புக்கு சென்று இரவு முழுவதும் விழித்திருந்தேன். அடுத்தநாள் அந்த பகுதிக்கு யாராவது சுற்றிப்பார்க்க அல்லது மீன்பிடிக்க வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அன்று முழுவதும் அப்பகுதிக்கு யாரும் வரவில்லை. அன்று மீன் உள்ளிட்ட சில உயிரினங்களை சாப்பிட்டு உயிர் உயிர் பிழைத்தேன்.
அடுத்த நாள் காலை படகு கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கி விட்டது. அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு படகை கண்டதால், தனது சட்டையை கழட்டி சைகை காட்டினேன். இதை கவனித்த அந்த படகில் இருந்தவர்கள் என்னை உயிருடன் மீட்டனர். இதையடுத்து 27 ஆம் தேதி கடலுக்கு சென்று படகு கோளாறால் அட்லாண்டிக்கில் சிக்கிக்கொண்ட ஸ்டூவர்ட் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.