இந்தோனேசியாவில் நடுக்கடலில் மாயமான நீர்முழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இந்தோனேசியாவில் கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரகத்தை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஓன்று பாலித் தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இந்தோனேசியா கடற்படையினர், மாலுமிகள் உட்பட 53 பேர் பயணித்துள்ளனர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல் நேற்று 4:30 மணி அளவில் பாலி தீவு பகுதியில் சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் நீர்மூழ்கி கப்பல் உடனான தொடர்பு முயற்சித்தபோது அந்த முயற்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.
பின்னர் இந்தோனேசியா கடற்படையினருக்கு தகவல் அளித்த நிலையில் உடனடியாக கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக எந்த இடத்தில் தொடர்பு இழந்ததோ அந்த பகுதியில் தேடி வந்துள்ளனர். மேலும் 1395 எடை கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் மாயமாகி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய ராணுவ தளபதி ஹடின் டிஜஹ்ஜண்டொ தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலை தேடுவதற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தோனேஷியா கடற்படையினர் உதவி கோரியுள்ளனர்.