நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினருக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துரோகம் இழைத்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உயர் பணவீக்கம், ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக நடுத்தர வகுப்பினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பணவீக்கம் மற்றும் முழு ஊதிய குறைப்பை முறியடிக்க நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மத்திய நிதி மந்திரியும், பிரதமரும் தங்களுடைய நடவடிக்கைகளின் மூலம் அவர்களை ஏமாற்றியுள்ளனர். இது நடுத்தர வகுப்பினருக்கு செய்யும் துரோகம் என்று ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.