Categories
தேசிய செய்திகள்

நடுநடுங்கவைக்கும் கொடூர சம்பவம்….!!காளி சிலையின் காலடியில் மனித தலை….!! நரபலியா….??

காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது இதனை போலீசார் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஐதராபாத்தை நாகார்ஜுன சாகருடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு காளி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காளி தேவி சிலையின் காலடியில் மனித தலை வைக்கப்பட்ட விதம் நரபலியாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவரை அடையாளம் காண 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடலின் எஞ்சிய பாகம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர் வேறு ஒரு பகுதியில் கொலை செய்யப்பட்டு தலை மட்டும் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதுவரை, தலை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,என்று அம்மாவட்ட டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |