உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் சில நாட்களாகவே நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். அதை ஒரு வீடியோ காட்சியும் தற்போது உறுதி செய்துள்ளது.அந்த வீடியோவில் வெள்ளை உடை அணிந்த உருவம் ஒன்று மொட்டை மாடியில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி பதற வைக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ உண்மையானது என நினைத்து உள்ளூர் வாசிகள் பயந்தாலும் பெரும்பாலானோர் இது போலியான வீடியோ என்று கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
बनारस में छतों पर एक सफेद कपड़ा पहने भूत के चलने का वीडियो तेजी से वायरल हो रहा है, चश्मदीदों ने पुलिस से जांच की मांग की है… pic.twitter.com/e8KqvvYIr0
— Banarasians (@banarasians) September 22, 2022