நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து பொதுவெளியில் மது அருந்தியதற்காக யூடியூபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பொதுவெளியில் சாலையின் நடுவில் நாற்காலியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக மரு அருந்திய யூடியூபரும், சமூக ஊடக பிரபலமுமான பாபி கட்டாரிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நீதிமன்றம் இந்த வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததையடுத்து, பாபி கட்டாரியை கைது செய்ய டேராடூன் கண்டோன்மென்ட் போலீசார் ஹரினா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புக் குழுக்களை அனுப்பினர்.
முன்னதாக, விமானத்தில் புகை பிடித்த சம்பவம் தொடர்பாக பாபி கட்டாரியா மீது விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 23-ம் தேதி துபாயில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.