Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில்…. அரசு – தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம்…. திருப்பூரில் பெரும் பரபரப்பு…!!!

நடு ரோட்டில் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இதே நேரத்தில் தனியார் பேருந்து ஒன்றும் கோயம்புத்தூருக்கு கிளம்பியது. இந்த 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் திடீரென அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து சாலையை ஆக்கிரமித்து சென்றுள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் பேருந்தை நிறுத்தினார். அதன் பிறகு தனியார் பேருந்தை நிறுத்தி ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதுகுறித்து அவிநாசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 ஓட்டுனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் தனியார் பேருந்து ஓட்டுனரிடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் அதிவேகமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்வதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பயணிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |