டிக் டாக் பிரபலம் சுகந்தி அளித்த புகாரின் பெயரில் நேற்று காவல்துறையினர் திவ்யாவை கைது செய்தனர். இந்நிலையில் அவர் கைது செய்வதற்கு முன்னதாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கார்த்தி என்ற காதலனை தேடி திவ்யா என்பவர் தொடர்ச்சியாக டிக்டாக்கில் வீடியோ போட்டு வந்தார். பின்பு யூடியூப் வீடியோக்களை போட தொடங்கினார். இதற்கிடையில் திவ்யாவுக்கும் சுகந்திக்கும் டிக்டாக்கில் இருந்து தொடங்கிய சண்டை யூடியூபிலும் தொடங்கியது. அண்மையில் அம்மா நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருவரையும் முதல் முறையாக டிவி விவாதத்திற்கு அழைத்து வந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்படி இருவருக்கும் இடையேயான சண்டையை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.
https://www.youtube.com/watch?v=LaImm0T6U5g
இந்நிலையில் சுகந்தி மற்றும் அவரது அக்கா நாகஜோதி தந்தை ராஜு,16 வயது மகள் ஆகியோர் விபச்சாரம் நடத்தி வருவதாக யூடியூபில் திவ்யா கூறினார். இதையடுத்து சுகந்தி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பெயரில் நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த திவ்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் கைத்தாவதற்கு முன்பாக நடுரோட்டில் கதறி அழுதபடி ஆவேசமாக பேசிய புதிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தன்னை போலீசார் கைது செய்தால் நடுரோட்டில் தீக்குளிப்பேன். ஸ்டாலினை சந்திப்பேன், தமிழ்நாடு இரண்டாகி போக்கிவிடும் என்று மிரட்டியுள்ளார்.